News
பட்ஜெட் தாக்கலுக்குப் பின் பங்குசந்தைகள் சரிவு
பாஜக தொடர்ந்து இரண்டாவது முறையாக பொதுத்தேர்தலில் அறுதிப் பொரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசின் முதல் பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இன்று காலை பங்குச்சந்தை உயர்வுடன் தொடங்கியது. சென்செக்ஸ் ஜூன் 11ஆம் தேதிக்குப் பின் முதல் முறை 40,000 புள்ளிகளை எட்டியுள்ளது. நிப்டி 11,970 புள்ளிகளைக் கடந்தது.

ஆனால், விரைலேயே இரு சந்தைகளும் சரியத் தொடங்கின. இன்றைய வர்த்தகத்தின் முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 39,513 புள்ளிகளில் நிறைவு கொண்டது. தேசிய பங்குச்சந்தை குறியீடு நிப்டி 135 புள்ளிகளை இழந்து, 11,811 புள்ளிகளில் முடிந்தது. இரு சந்தைகளிலும் கிட்டத்தட்ட 1% அளவுக்கு சரிவு ஏற்பட்டுள்ளது.
உலகத்துறை, எண்ணெய் மற்றும் எரிவாயுத்துறை, பார்மா, மற்றும் ஐடி துறை பங்குகளின் மதிப்பு வீழ்ந்தது. பெரிய வீழ்ச்சிக்கு மத்தியிலும் இண்டஸ்இன்ட் வங்கி, கொடாக் வங்கி, ஹிந்துஸ்தான் லீவர், பாரதி ஏர்டெல், ஏசியன் பெயிண்ட்ஸ், எஸ்பிஐ, ஹெச்சிஎல் டெக், பஜாஜ் பைனான்ஸ், ஹெச்டிஎப்சி, ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ் ஆட்டோ, மாருதி ஆகிய நிறுவனங்கள் ஆதாயம் அடைந்தன.
