
News
சர்வதேச அளவில் களங்கம் ஏற்படுத்திய பாஜக : காங்கிரஸ் குற்றச்சாட்டு!!
சர்வதேச அளவில் இந்தியாவிற்கு பாஜக களங்கம் ஏற்படுத்தியுள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள காங்கிரஸ் கட்சி கடும் நடவடிக்கை எடுக்காமல் பேரளவு கட்சியிலிருந்து நீக்கி மக்களை ஏமாற்றி இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளது.
இந்நிலையில் நாட்டை துண்டாக்க நினைக்கும் பாஜகவின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது என விமர்சித்துள்ள காங்கிரஸ் நாட்டை துண்டாக்க நினைக்கும் பாஜகவின் எண்ணத்தை காங்கிரஸ் கட்சி தோற்கடிக்கும் என தெரிவித்துள்ளது.
இதனிடையே வெறுப்பு, அச்சம், பிரித்தாலும் கொள்கை என்பதுதான் பாஜகவின் கொள்கை என தெரிவித்துள்ள காங்கிரஸ் இந்தியாவின் ஒற்றுமைக்காக இலட்சக்கணக்கானோர் தங்கள் வாழ்க்கையைத் தியாகம் செய்வதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், இதனை திரும்ப பெறும் வகையில் காங்கிரஸ் ஒருபோதும் கைவிடாது என தெரிவித்துள்ளது. பாஜகவின் தலைவர் இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
