ஸ்டெர்லைட் ஆலை கழிவுகள்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!!

ஸ்டெர்லைட் ஆலையின் கழிவுகளை அகற்ற அனுமதி கோரிய வேதாந்தா நிறுவன விண்ணப்பத்தை மூன்று மாதத்தில் பரிசீலிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையின் கழிவுகளை அகற்ற கோரி வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்ற மதுரை கிளைyil வழக்கு ஒன்று தொடரப்பட்டது.

குறிப்பாக கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் போது மருத்துவ தேவையை பூர்த்தி செய்வதற்காக ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்பட்டது. இதனிடையே ஆக்ஸிஜன் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட எண்ணெயை மற்றும் கழிவுகளை அகற்ற கோரி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித பயனும் இல்லை என கூறப்படுகிறது.

இதனால் மூலப்பொருட்களை வெளியேற்ற வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது. தற்போது வழக்கின் விசாரணை அமர்வு இன்று வந்த நிலையில் அப்போது பேசிய நீதிபதிகள் தமிழக சுற்றுச்சூழல் துறை செயலர் 3 மாதத்தில் பரிசீலித்து உரிய முடிவெடுக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

அதே சமயத்தில் வேறு நபர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் அதனையும் பரிசீலிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment