ஸ்டெர்லைட் பராமரிப்பு பணி – 100 பேர் கைது

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கட்சியினர் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் இன்று ஸ்டெர்லைட் பராமரிப்பு பணிகளுக்கு எதிராக மனு அளிக்க திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி கோரி ஆலை நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், பராமரிப்பு பணிகளுக்கு அனுமதி வழங்கியது.

ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கக் கூடாது என வி.சி.க., ம.தி.மு.க., சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் என தகவல் தெரிவித்தனர்.

அவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தி, ஒரு சிலரை மட்டும் கலெக்டரை சந்தித்து மனு அளிக்குமாறு கூறினர். இதனால் மனுதாரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

முதல் பந்திலேயே விக்கெட்.. வாழ்வா? சாவா போட்டியில் சொதப்பும் டெல்லி..!

இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்ததால் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்பு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.