Connect with us

#BREAKING திமுகவுக்கு வாக்கு சேகரித்த வெளிநாட்டவருக்கு சிக்கல்!

Covai

செய்திகள்

#BREAKING திமுகவுக்கு வாக்கு சேகரித்த வெளிநாட்டவருக்கு சிக்கல்!

#BREAKING திமுகவுக்கு வாக்கு சேகரித்த வெளிநாட்டவருக்கு சிக்கல்!

கோவைக்கு பணி நிமிர்த்தமாக வந்த வெளிநாட்டவர் திமுகவிற்கு வாக்கு சேகரித்து சிக்கலில் சிக்கியுள்ளார்.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 12,838 வார்டுகளுக்கு மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.

தமிழகம் முழுவதும் மொத்தம் 74 ஆயிரத்து 416 வேட்புமனுக்கள் பெறப்பட்ட நிலையில், பரீசிலனையின் போது 2 ஆயிரத்து 062 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மேலும் 14 ஆயிரத்து 324 வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவை திரும்ப பெற்றுக்கொண்டனர். தற்போதைய நிலவரப்படி 57 ஆயிரத்து 600க்கும் அதிகமான வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இன்று மாலையுடன் இறுதிக்கட்ட பிரச்சாரமும் நிறைவடைந்த நிலையில், நாளை மறுநாளுக்கான வாக்குப்பதிவு பணிகள் மாநில தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில் கோவைக்கு பணி நிமிர்த்தமாக வந்த ருமேனியா நாட்டை சேர்ந்த ஸ்டெபன் என்பவர், பேருந்தில் பெண்கள் யாரும் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்யும் இலவச திட்டத்தை பார்த்து வியந்து போனார். உலகிலேயே முதன் முறையாக இப்படியொரு திட்டத்தை கண்டு ஆச்சர்யம் அடைந்த ஸ்டெபன் திமுகவிற்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பேருந்து நிலையங்கள், குடியிருப்பு பகுதிகள், கடைகள் என அனைத்து பகுதிகளிலும் துண்டு பிரசுரங்களை கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதுதொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் வெளிநாட்டவர் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது விசா நடைமுறைகளுக்கு விரோதமானது என்பதால், சாஸ்திரிபவன் வளாகத்தில் உள்ள மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தூதரகத்தில் அசல் ஆவணங்களுடன் ஆஜராகி உரிய விளக்கம் அளிக்கும் படி ஸ்டெபனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. விளக்கம் ஏற்புடையதாக இல்லாத பட்சத்தில் ஸ்டெபன் மீது வெளிநாட்டவர் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top