நடிகர் அஜித் திரையில் எப்படியோ அப்படித்தான் நிஜ வாழ்க்கையிலும் உண்மையான ஹீரோ என்பது நாம் அனைவருக்கும் தெரியும். அதனால் தான் அவரை அனைத்து ரசிகர்களுக்கும் பிடிக்கிறது. இந்நிலையில் நடிகர் அஜித்தின் தங்கமான மனசு குறித்து முன்னணி நடிகர் ஒருவர் கூறியுள்ளார்.
அவர் வேறு யாருமல்ல கிரீடம் படத்தில் அஜித்துக்கு அப்பாவாக நடித்த பிரபல நடிகர் ராஜ்கிரண் தான். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ராஜ்கிரண், “கீரிடம் படத்துல அஜித் நடித்து கொண்டிருந்த சமயத்தில் அவருக்கு முதுகுல ஆப்ரேஷன் பண்ணிருந்தாங்க. ஷாட் முடிஞ்சதும் கிடைக்கிற கேப்ல உட்காராம நடந்துக்கிட்டே இருப்பாரு. நான் அதை கவனிச்சிக்கிட்டே இருந்தேன்.
கொஞ்சம் உன்னிப்பா கவனிச்சப்பதான் அவர் முதுகு வலியை மறைக்கறதுக்காக இப்படி நடந்தது தெரிய வந்துச்சு. ஒரு கட்டத்துல தாங்க முடியாத வலியில நடிச்சிட்டு இருக்குறதும் புரியஞ்சது. உடனே நான் அவர்கிட்ட சொல்றேன்ணு கோச்சுக்காதீங்க. இவ்ளோ உடம்பு வலி இருக்கும்போது ஏன் வலியோட நடிக்கனும்?
படத்தோட தயாரிப்பாளர் சுரேஷ் பாலாஜி உங்களுக்கு நல்லா தெரிஞ்சவருதானே அவர்கிட்ட சொல்லி, ஒரு நாள் ஓய்வு எடுக்கலாமேனே கேட்டேன். உடனே அவர் பாலாஜி சார் எவ்வளவு பெரிய மனுஷன். என்ன நம்பி அவர் இப்படி ஒரு படத்தை ஆரம்பிச்சிருக்காரு.
நீங்க என்னோட வலியை நேரடியா பாக்குறீங்க. ஆனா அவரு சென்னைல இருக்காரு. நான் ரெஸ்ட் எடுத்தா யூனிட்ல அவருக்கு உடம்பு வலியாம் அதான் ரெஸ்ட் எடுத்திட்டிருக்காருன்ணு சொல்லுவாங்க. நீங்க என்ன பார்க்கறதால என் வலி உங்களுக்கு புரியும். ஆனா அவருக்கு புரியாது. இது வலிதான சார் தாங்கிக்கலாம்னு சொன்னாரு. அவரோட அந்த தங்கமான மனசுதான் அவரை இவ்ளோ உயரத்துல வச்சிருக்கு” என அஜித் குறித்து மிகவும் பெருமையாக பேசினார்.
அஜித் நல்ல மனுஷன்னு தெரியும் ஆனா தன்னோட வலிய பொருட்படுத்தாமல் மத்தவங்களுக்கு நேரத்துக்கு படத்தை முடிச்சு கொடுக்கனும்னு அவரு நினைச்சிருக்காரு பாருங்க உண்மையாவே அவருக்கு தங்கமான மனசுதாங்க.