கொரோனா: பாதிப்பு, குணமடைந்தது, உயிரிழப்பு, தடுப்பூசி போன்றவற்றின் நிலவரம்!

தற்போது இந்தியாவில் கொரோனா தாக்கம் படிப்படியாக உயருகிறது. இதனால் மக்கள் அனைவரும் மிகுந்த பாதுகாப்போடு காணப்பட வேண்டும் என்ற கட்டாயத்துக்கு தள்ளப்படுகின்றனர்.கொரோனா

இந்த நிலையில் இந்தியாவில் மேலும் கொரோனா பாதிப்பானது அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14348 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

அதோடு மட்டுமில்லாமல் இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 805 பேர் இந்த கொரோனா  நோயால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தியாவில் இதுவரை கொரோனா உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 57 ஆயிரத்து 191 ஆக உயர்ந்துள்ளது.

அதோடு மட்டுமில்லாமல் இந்தியாவில் இதுவரை 3 கோடியே 42 லட்சத்து 46157 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது தெரியவந்துள்ளது. இதனால் இந்தியாவில் இந்த கொரோனா வைரஸ்க்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 61 ஆயிரத்து 334 ஆக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுவரை இந்தியாவில் 3 கோடியே 36 லட்சத்து 27 ஆயிரத்து 632 பேர் கொரோனா  குணமடைந்து வீடு திரும்பினார். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 13 ஆயிரத்து 198 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினார்.

இந்தியாவில் நேற்று மட்டும் 74 லட்சத்து 33 ஆயிரத்து 392 கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதார அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 104 கோடியே 82 லட்சத்து 966 கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் சுகாதாரத் துறை கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment