60 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட சிலை… அமெரிக்காவில் கண்டுபிடிப்பு..!!

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே கோயிலில் திருடப்பட்ட சிலை அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன் காணமல் போன சிலைகளை மீட்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அடுத்தமுத்தம்மாள் புரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாத சுவாமி கோயிலில் இருந்து 60 ஆண்டுகளுக்கு முன் வெண்கலச் சிலை ஒன்று காணாமல் போனது.

இது குறித்து புகார் அளிக்கப்பட்ட நிலையில் சம்ஹாரம்மூர்த்தியின் வெண்கலச் சிலை அமெரிக்காவில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கண்டுப்பிடித்தனர்.

இந்த சிலையின் மதிப்பானது 34 கோடி என்றும் இந்த சிலையினை Christios.com என்ற இணையதளத்தில் அதிகாரிகள் கண்டுபிடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment