Connect with us

டெல்லி இந்தியா கேட்டில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் உருவ சிலை நிறுவப்படும்:மோடி

Netaji

செய்திகள்

டெல்லி இந்தியா கேட்டில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் உருவ சிலை நிறுவப்படும்:மோடி

டெல்லி இந்தியா கேட்டில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் உருவ சிலை நிறுவப்படும்:மோடி

இந்த ஆண்டு முதல் குடியரசு தின விழா ஜனவரி 23ஆம் தேதி முதல் கொண்டாடப்பட உள்ளது. ஏனென்றால் ஜனவரி 23ஆம் தேதி ஜெய் ஹிந்த் என்று முழக்கமிட்ட இந்திய விடுதலைப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாள் கொண்டாடப்படபடுகிறது.

இதனால் இனி வர இருக்கின்ற ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின கொண்டாட்டம் ஜனவரி 23ம் தேதியிலிருந்து தொடங்கும் என்று சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை பிரதமர் மோடி டெல்லி இந்தியா கேட் பகுதியில் நேதாஜி சிலை அமைக்கப்படும் என்று கூறினார்.

டெல்லி இந்தியா கேட் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு உருவ சிலை நிறுவப்படும் என்று பாரத பிரதமர் நரேந்திர மோடி கூறினார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125வது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி இவ்வாறு அறிவித்தார்.

டெல்லி இந்தியா கேட் பகுதியில் கிரானைட் கல்லில் பிரமாண்ட சிலை நிறுவப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். கிரானைட் கல்லில் சிலை அமைக்கப்படும் வரை இந்தியா கேட் பகுதியில் ஹாலோகிராம் நுட்பத்தில் நேதாஜி உருவம் மெல்ல செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

ஜனவரி 23ம் தேதியில் முப்பரிமான ஒளிப்படவியல் நுட்பத்தினாலான நேதாஜி சிலையை தாம் திறந்து வைக்க உள்ளதாகவும் பிரதமர் மோடி அறிவித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top