தொடர் அமளி: மாநிலங்களவை எம்பிக்கள் சஸ்பெண்ட்! குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் தடை!!

இந்தியாவில் அனைத்து அதிகாரங்களும்  ஆளுங்கட்சி பெற்றிருக்கும். அனைத்து அதிகாரங்களும் ஆளுங்கட்சி பெற்றிருந்தாலும் ஆளுங்கட்சியை எதிர்த்து பேசும் அளவிற்கு உரிமைகளை பெற்றுள்ளது எதிர்க்கட்சிகள் தான்.

நாடாளுமன்றத்தில் அமைச்சரவை

இந்த எதிர்க்கட்சிகள் சட்டப்பேரவையில் ஆளுங்கட்சியை திகைக்கும் அளவிற்கு கேள்வி கேட்கும் உரிமையை பெற்றுள்ளது. இந்த நிலையில் இவை சட்டப்பேரவை மட்டுமின்றி நாடாளுமன்றத்திலும் எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சியை பார்த்து தொடர்ந்து கேள்வி கேட்டு விமர்சித்து வரும்.

இந்த நிலையில் திடீரென்று எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மாநிலங்களவை எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்பி டோலா சென் சிவசேனா கட்சியின் எம்பி பிரியங்கா சதுர்வேதி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மாநிலங்களவையின் மாண்பை குறைக்கும் வகையிலும், அவை நடவடிக்கைகளை தடுத்ததாகவும் கூறப்பட்டதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மாநிலங்களவையில் த் குறைக்கும் வகையில் செயல்பட்டதாக பத்துக்கும் மேற்பட்ட எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

வேளாண் சட்டங்கள் வாபஸ் மசோதா தாக்கல் செய்யப்பட்ட நிலையிலும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.சஸ்பெண்ட் செய்யப்பட்ட உறுப்பினர்கள் குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட்  செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் ,இடதுசாரி, சிவசேனா போன்ற கட்சிகளை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment