Connect with us

வசமாக சிக்கும் பாஜக!!! மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் அதிரடி கைது!!!

Capture 18

தமிழகம்

வசமாக சிக்கும் பாஜக!!! மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் அதிரடி கைது!!!

தருமபுரியில் பாரதமாதா கோவில் பூட்டை உடைத்து மாலை அணிவித்த விவகாரத்தில் நாமக்கல், ராசிபுரத்தில் பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம்  கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் உள்ள அரசுக்கு சொந்தமான பாரதமாதா நினைவிடத்தின் பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் அத்துமீறி நுழைந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக பாரதமாதா கோவில் பூட்டை உடைத்து மாலை அணிவித்ததாக தெரிகிறது.

இதன் காரணமாக கிட்டத்தட்ட 50 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது கே.பி.ராமலிங்கம் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தின் எதிரொலியாக அப்பகுதி முழுவதும் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும், அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் இருப்பதற்காக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top