கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய பல்கலைக்கழகம் மாணவ மாணவிகள் சேர்க்கைக்கு கட்டாயம் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்தது. அதோடு மட்டுமில்லாமல் நுழைவுத் தேர்வில் மதிப்பெண்களை வைத்து தான் மாணவர் சேர்க்கை இருக்கும் என்று கூறுகிறது.
இந்த நிலையில் தற்போது மாநில பல்கலைக் கழகங்களும் பொது நுழைவுத்தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடக்கலாம் என்று யுஜிசி அறிவித்துள்ளது. அதன்படி மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளில் சேர பொது நுழைவுத் தேர்வு நடத்த யுஜிசி முடிவெடுத்துள்ளது.
CUET தேர்வு விண்ணப்ப பதிவு ஏப்ரல் 2ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் மாநில பல்கலைக் கழகங்களும் CUET மூலம் மாணவர்களை நடத்தலாம் என்றும் அறிவித்துள்ளது. பல்வேறு வகையான பாடத்திட்டத்தில் மாணவர்கள் பிளஸ் டூ முடிக்கும் சூழலில் அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்க CUET மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
நாடு முழுவதும் மாநில பல்கலைக்கழகங்கள், தனியார் உயர்கல்வி நிறுவனங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி அழைப்பு விடுத்துள்ளது.