News
மாநில மனித உரிமை ஆணையம் அரசு மருத்துவமனைக்கு நோட்டீஸ்!
தற்போது பல பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. காரணம் இந்தியாவில் சில மாதங்களாக கண்ணுக்குத் தெரியாத நோயான கரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருந்தது. இதன் விளைவாக இந்தியாவில் உள்ள பல அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் பல்வேறு இதமான நோயாளிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும் அவர்களில் பலரும் உயிரிழந்தனர் என்றும் மேலும் இந்த கரோனா நோயானது கடந்த ஆண்டு கட்டப்பட்ட நிலையில் இந்த ஆண்டு மீண்டும் வரத் தொடங்கியது.
இவை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக உயிரிழப்பை உருவாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் பல பகுதிகளில் கரோனா நோய் மட்டுமின்றி சிகிச்சைக்காக தேவைப்படும் ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசிகளின் பற்றாக்குறையினாலும் நோயாளிகள் உயிரிழந்தனர். மேலும் இந்தியாவில் அதிகமாக ஆக்ஸிஜன் பற்றாக்குறை நாள் பல அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உயிர் இழப்புகள் அதிகமாக இருந்தன.
இந்நிலையில் தற்போது இதுபோன்ற சம்பவத்திற்கு எதிராக மாநில மனித உரிமை ஆணையம் அரசு மருத்துவமனைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இவை நம் தமிழகத்தில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. அதன்படி தமிழகத்தில் உள்ள நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் நோயாளி பலியான விவகாரத்தில் மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.ஆக்ஸிஜன் நிறுத்தியதால் சிகிச்சைபெற்று வந்த தனியார் வங்கி மேலாளர் உயிரிழந்ததாக இந்த புகாரில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் தற்போது உத்தர விட்டுள்ளது மாநில மனித உரிமை ஆணையம் மேலும் இந்த புகார் தொடர்பாக மருத்துவ கல்வி இயக்குனர் அறிக்கை அளிக்க தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
