Connect with us

மாநிலக் கல்விக்கொள்கை கருத்துக் கேட்பு-ஒரு மாதம் அவகாசம் நீட்டிப்பு!!

1000 rupee for girl student

தமிழகம்

மாநிலக் கல்விக்கொள்கை கருத்துக் கேட்பு-ஒரு மாதம் அவகாசம் நீட்டிப்பு!!

நம் தமிழகத்தில் தற்போது மாநில கல்விக் கொள்கை நடைமுறையில் உள்ளது. ஆயினும் மத்திய அரசு தேசியக் கல்விக் கொள்கையினை கொண்டு வரப்படும் என்ற முடிவுக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

அதோடு மட்டுமில்லாமல் நீட் விவகாரத்திலும் தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பினை தெரிவித்து வருகிறது. மேலும் தமிழக அரசு மக்களிடையே மாநில கல்விக் கொள்கை தொடர்பாக கருத்து கேட்பினையும் நடத்திக் கொண்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போது மாநில கல்வி தொடர்பாக அக்டோபர் 15ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி மாநில கல்விக் கொள்கை உயர்மட்ட குழுவுக்கு மேலும் ஒரு மாதம் கூடுதலாக அவகாசம் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மாநில கல்வி கொள்கை தொடர்பாக கருத்து கேட்புக்கான அவகாசம் அக்டோபர் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மாணவர்கள், கல்வியாளர்கள், தங்கள் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை [email protected] என்ற இணையதளத்தில் அனுப்பலாம் என்றும் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top