Connect with us

பாரத ஸ்டேட் வங்கி மருத்துவ தகுதி வழிகாட்டு விதிகள்!-கடும் எதிர்ப்பு!!

state bank of india

செய்திகள்

பாரத ஸ்டேட் வங்கி மருத்துவ தகுதி வழிகாட்டு விதிகள்!-கடும் எதிர்ப்பு!!

பாரத ஸ்டேட் வங்கி மருத்துவ தகுதி வழிகாட்டு விதிகள்!-கடும் எதிர்ப்பு!!

கடந்த மாதம் புதிய பணியாளர் சேர்ப்பு மற்றும் பதவி உயர்வு குறித்தான மருத்துவ தகுதி வழிகாட்டு விதி பற்றி பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்டிருந்தது. கருவுற்று மூன்று மாத ஆனவர்கள் பணியில் சேர முடியாது என்றும் அவர்கள் குழந்தை பிறந்து 4 மாதம் கழித்துதான் பணியில் சேர அனுமதிக்க படுவர் என்றும் பாரத ஸ்டேட் வங்கி மருத்துவ தகுதி வழிகாட்டு விதிகளை வெளியிட்டு இருந்தது.

இதற்கு பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். டெல்லி மகளிர் ஆணையம், பெண்களின் உரிமையை பறிக்கும் செயல் என்று பாரத ஸ்டேட் வங்கியின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்பி வெங்கடேசன் அரசியல் சாசனத்தின் பாலின சமத்துவத்துக்கு எதிரான அப்பட்டமான மீறல் என்று கண்டனம் தெரிவித்துள்ளார். பாரத ஸ்டேட் வங்கி தலைவர், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் அனுப்பினார்.

பெண்களை உளவியல் ரீதியாக பாதிக்காதா? என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது. பாரத ஸ்டேட் வங்கியின் அறிவிப்புக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்தார். தாய்மையை இழிவுபடுத்தும் செயல் என்றும் அவர் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top