இனி வருஷா வருஷம் ஜனவரி 16 ஆம் தேதி ஸ்டார்ட் அப் தினம் கொண்டாடப்படும்: மோடி;

இந்தியாவின் பிரதமராக உள்ளார் நரேந்திர மோடி. அவர் நாள்தோறும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதன் வரிசையில் இன்றைய தினம் ஜனவரி 16ம் தேதி ஸ்டார்ட்அப் தினம் கொண்டாடப்படும் என்று அறிவித்தார்.

modi

அதன்படி இனி ஆண்டுதோறும் ஜனவரி 16 ஆம் தேதி ஸ்டார்ட் அப் தினமாக கொண்டாடப்படும் என்று பாரத பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். சிறு, குறு தொழில் முனைவோருடன் காணொலி வாயிலாக உரையாடிய பிரதமர் நரேந்திர மோடி இவ்வாறு அறிவித்தார்.

நாட்டின் முதுகெலும்பாக ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உருவெடுக்க உள்ளன என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார். சிறு, குறு தொழில் முனைவோர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலியில் கலந்துரையாடினார் நிகழ்த்தினார்.

இந்த பத்தாண்டுகள் அதாவது டிகேட் தொழில்நுட்ப பத்தாண்டுகள் டெக்கேட் என அழைக்கப்படும் என்று பிரதமர் மோடி கூறினார். அரசு மற்றும் நிர்வாக முறைகளில் இருந்து விடுபட்டு புதுமை தொழில்முனையும் சக்தியாக திகழும் என்று மோடி கூறினார்.

இந்திய 100-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் என்று பிரதமர் மோடி கூறினார். புதிய முயற்சிகளால் உலக அரங்கில் இந்தியா பெருமிதமான நிலையை எட்டும் என்று பிரதமர் மோடி கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment