Connect with us

பி.எம் கேர்ஸ் திட்டம் தொடங்கியது; காணொலி வாயிலாக மோடி!!

modi

News

பி.எம் கேர்ஸ் திட்டம் தொடங்கியது; காணொலி வாயிலாக மோடி!!

2020 மற்றும் 2021 ஆகிய இரண்டு ஆண்டுகளில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டது. அதோடு மட்டுமில்லாமல் இந்த நோயினால் பல குழந்தைகள் பெற்றோரை இழந்து தவித்தனர்.

மேலும் அவர்களின் கல்வி படிப்பு கேள்விக்குறியாகும் நிலையும் காணப்பட்டது. அதனை தடுக்கும் விதமாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கொரோனாவால் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு பி.எம் கேர்ஸ் என்ற திட்டத்தின் மூலம் கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அந்தத் திட்டம் இன்றையதினம் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி பி.எம் கேர்ஸ் திட்டத்தின் கீழ் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை திட்டம் வழங்கப்பட்டு வருகிறது.

பி.எம் கேர்ஸ் பாஸ்புக் மற்றும் சுகாதார அட்டை ஆகியவையும் குழந்தைகளுக்கு வழங்கப்பட உள்ளது. பள்ளி செல்லும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் பலன்களை பிரதமர் மோடி காணொளி வாயிலாக வழங்குகிறார்.

தங்குமிட வசதி அளித்தல், கல்வி உதவித்தொகை, மருத்துவ காப்பீடு உள்ளிட்டவை பி.எம் கேர்ஸ் திட்டத்தில் அடங்கும். கொரோனாவால்  உயிரிழந்த குடும்பத்தினருடன் நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் துணை நிற்கிறார்கள் என்று மோடி கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in News

To Top