தொடங்கியது TNPSC…..! இன்று முதல் மூன்று நாட்கள் தேர்வு-‘சென்னையில் மட்டும்’!!
தமிழக மாணவர்களிடையே அரசு வேலைக்கு போக வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் காணப்படுகிறது. இதனால் அவர்கள் படிக்கும் போதே அரசு வேலைக்கு தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.
அவர்களுக்கு உதவியாக டிஎன்பிஎஸ்சி உள்ளது. இன்று டிஎன்பிஎஸ்சி தேர்வு நடைபெற்று வருகிறது. அதன்படி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு 2020 ஜனவரி 20ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இந்நிலையில் இதற்கான முதன்மை தேர்வு இன்று தொடங்கி ஆறாம் தேதி வரை சென்னை மையத்தில் மட்டும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குரூப் 1 தேர்வு துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் ,வணிகவரி உதவி ஆணையர், கூட்டுறவு சங்க துணை பதிவாளர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 60 காலியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலை தேர்வு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் பல்வேறு தடை காரணமாக முதன்மைத் தேர்வு நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டது. இருப்பினும் இன்று முதன்மை தேர்வுக்கு தேர்வாகியுள்ள 3800 பேர் தேர்வு எழுதுகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
