Connect with us

தொடங்கியது ‘பொதுக்குழு கூட்டம்’..; தொண்டர்கள் ஆரவாரம்-அமைதி காக்க வேண்டுகோள்!

அதிமுக

தமிழகம்

தொடங்கியது ‘பொதுக்குழு கூட்டம்’..; தொண்டர்கள் ஆரவாரம்-அமைதி காக்க வேண்டுகோள்!

பெரும் பரபரப்பான நிகழ்வு அதிமுகவில் நடந்து கொண்டு வருகிறது. தற்போது அதிமுகவில் ஒற்றை தலைமை உருவாகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதற்கு முன்னதாக அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகிய இருவர் தலைமை பொறுப்பில் இருந்தனர்.

இந்த நிலையில் இன்றைய தினம் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இந்த கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் வந்துள்ளதாக தெரிகிறது. பொதுக்குழு கூட்டம் நடத்தக் கூடாது என்று பன்னீர்செல்வத்தின் கையெழுத்துடன் கூடிய மனு காவல் நிலையத்தில் வந்தது.

இருப்பினும் கூட நேற்றையதினம் உதவி உரிமையியல் நீதிமன்றம் பொதுக்குழு நடத்துவதற்கு தடை விதிக்க முடியாது என்று உத்தரவிட்டது. இந்த நிலையில் இன்று சென்னை வானகரத்தில் தொண்டர்களின் ஏராளமான கூட்டத்தின் மத்தியில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றுக் கொண்டு வருகிறது.

இதில் ஒவ்வொரு முன்னாள் அமைச்சர்களும் மேடையில் வந்து தொண்டர்களிடையே பேசிக் கொண்டு வருகின்றனர். அந்தக் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமிக்கு மிகுந்த வரவேற்பு கொடுப்பதாக காணப்படுகிறது.

மேலும் முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் மேடைக்கு வந்து விட்டு கீழே இறங்கினார். இவர் தற்போதைய துணை ஒருங்கிணைப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தொண்டர்கள் அமைதி காக்கும்படி பொதுக்குழு மேடையில் முன்னாள் அமைச்சர் வளர்மதி பேசினார்.

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை என எம்ஜிஆர் பாடலை சுட்டிக்காட்டி வளர்மதி பேசினார். நீதிமன்ற ஆணைப்படி கூட்டம் நடைபெறுவதால் அமைதி காக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top