தொடங்கியது இல்லம் தேடி கல்வித்திட்டம்! – தொடங்கி வைத்தார் மு.க. ஸ்டாலின்!!

தமிழகத்தில் குழந்தைகளின் படிப்பு தற்போது மிகவும் பாதிப்பான நிலையில் காணப்படுகிறது. இதனை போக்கும் வகையில் இல்லம் தேடி கல்வி என்ற திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை இன்றைய தினம் தொடங்கி வைத்தார் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின்.ஸ்டாலின்

அதன்படி இல்லம் தேடி கல்வித் திட்டத்தை விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின். அரசு மாணவர்களின் கற்றல் இடைவெளியை குறைக்க இல்லம் தேடி கல்வித் திட்டம் உதவும் என்றும் அவர் கூறினார்.

முதற்கட்டமாக கடலூர், திண்டுக்கல் உள்பட 12 மாவட்டங்களில் இல்லம் தேடி கல்வி திட்டம் தொடங்கப்படுகிறது என்றும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கூறினார். இல்லம் தேடி கல்வித் திட்டத்தை உருவாக்கிய பள்ளிக்கல்வித்துறைக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார். இந்த இல்லம் தேடி கல்வி திட்டம் வாயிலாக லட்சக்கணக்கான மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்றும் என்றும் கூறினார்.

மிகப் பெரிய கல்வி புரட்சிக்கும் மறுமலர்ச்சிக்கும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது என்றும் முதல்வர் முக ஸ்டாலின் கூறினார். நூறாண்டு காலமாக மறுக்கப்பட்ட கல்வியை திண்ணைப் பள்ளிகள் வாயிலாகக் கொண்டு சேர்த்தது ஆரம்ப கால திராவிட இயக்கம் என்று கூறினார்.

திராவிட இயக்கம் என்றால் என்னவென்று தெரியாத சில கோமாளிகள் திராவிட இயக்கம் என்ன என்று கேள்வி எழுப்பி கொண்டே இருக்கிறார்கள் என்றும் முதல்வர் முக ஸ்டாலின் கூறினார். கல்விப் புரட்சியை கொண்டுவந்ததுதான் திராவிட இயக்கம் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறினார்.

நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்த பிறகுதான் சென்னை மாகாணத்தில் மாணவர்களுக்கு உணவு அளிக்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது என்றும் கூறினார். காமராஜர், எம்ஜிஆர், கலைஞர் ஆகியோரால் சத்துணவு திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment