Connect with us

உஷாரய்யா மொத்தமே 1875 இடம்தான்!ஆர்கிடெக்சர் கவுன்சிலிங் ஆரம்பித்துவிட்டது;

ஆர்கிடெக்சர்

News

உஷாரய்யா மொத்தமே 1875 இடம்தான்!ஆர்கிடெக்சர் கவுன்சிலிங் ஆரம்பித்துவிட்டது;

உஷாரய்யா மொத்தமே 1875 இடம்தான்!ஆர்கிடெக்சர் கவுன்சிலிங் ஆரம்பித்துவிட்டது;

முன்னொரு காலத்தில் இளைஞர்கள் மத்தியில் அதிகம் வரவேற்கப்பட்ட படிப்பாக பொறியியல் காணப்பட்டது. ஆனால் காலம் செல்ல செல்ல பொறியியல் படிப்பின் மீது உள்ள நாட்டம் மாணவர்கள் மத்தியில் மிகவும் குறைந்துள்ளது. ஆர்கிடெக்சர்

பல பொறியியல் கல்லூரிகள் தொடர்ச்சியாக மூடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பொறியியல் படிப்பு போன்றே மற்றொரு படிப்பாக காணப்படுகிறது ஆர்கிடெக்சர். இந்த நிலையில் ஆர்கிடெக்சர் படிப்புக்கு சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி கட்டிட கலை பொறியியல் படிப்பான பேச்சிலர் ஆப் ஆர்கிடெக்சர் படிப்பில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் கூறியுள்ளது. ஆன்லைன் முறையில் இன்று மாலை 5 மணி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவித்துள்ளது.

மாலை 7மணிக்கு மாணவர்களுக்கு தற்காலிக இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. நாளை நண்பகல் 12 மணிக்கு மாணவர்களுக்கான நிரந்தர இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தகவல் அளித்துள்ளது.

தமிழ்நாட்டில் மொத்தம் 48 ஆர்கிடெக்சர் கல்லூரிகள் உள்ளன. இந்த 48 கல்லூரிகளில் மொத்தம் 1875 இடங்கள் உள்ளன. இந்த 1875 இடங்களுக்கான கலந்தாய்வு இன்றையதினம் நடைபெறுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top