தொடங்கியது 10-வது மெகா தடுப்பூசி முகாம்! தமிழகம் முழுவதும் 50000 மையங்கள்;

இந்தியாவின் பெருமுயற்சியால் கண்ணுக்கு தெரியாத வைரஸ் கிருமியான கொரோனா கட்டுப்படுத்தப்பட்டது. கொரோனா நோய் தடுக்க மிகவும் உதவியது தடுப்பூசி. அதோடு மட்டுமில்லாமல் கொரோனாக்கு எதிராக பேரயுதமாக தடுப்பூசிகள் காணப்பட்டன.இதனால் இந்தியாவில் நூறு கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு, இவை உலகத்தை திரும்பிப் பார்க்கும் அளவிற்கு பெரிய சாதனையாக காணப்படுகிறது.

மெகா தடுப்பூசி முகாம்

இந்த நிலையில் தமிழகத்தில் வாராவாரம் கொரோனா மெகா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு லட்சக்கணக்கில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நம் தமிழகத்தில் இன்றைய தினம் பத்தாவது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியுள்ளது.

அதன்படி இவை தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் மையங்களில் பத்தாவது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் இரண்டாவது தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தவேண்டிய 75 லட்சம் பேர் இந்த முகாம்களை பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுமார் இரண்டாயிரம் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகின்றன.ஏற்கனவே தமிழகத்தில் கடந்த வியாழக்கிழமை கொரோனா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment