ஸ்டார்ஷிப் ராக்கெட் வெடித்த சம்பவம்.. ஒரே நாளில் எலான் மஸ்க் சொத்து மதிப்பு சரிவு..!

பிரபல தொழிலதிபர் எலான் மாஸ்க் அவர்களுக்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனம் நேற்று உலகின் மிகப்பெரிய ராக்கெட்டை செலுத்திய நிலையில் அந்த ராக்கெட் வெடித்து சிதறியது.

இதன் காரணமாக மிகப்பெரிய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பங்குகள் சரிந்ததாகவும் இதனால் எலான் மஸ்க் சொத்து மதிப்பு 13 பில்லியன் டாலர் ஒரே நாளில் குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து முன்னணி நிறுவனம் ஒன்றின் அறிக்கையின்படி எலான் மஸ்க்கின் ஸ்டார்ஷிப் ராக்கெட் வெடித்த பிறகு அவருடைய சொத்து மதிப்பு 13 பில்லியன் குறைந்துள்ளது உறுதி செய்துள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் ராக்கெட் சோதனை பயணத்தில் புறப்பட்ட சில நிமிடங்களில் வெடித்து சிதறியது. இதன் காரணமாக அந்நிறுவனத்தின் வருவாய் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது என்றும் டெஸ்லாவின் பங்குகளையும் பாதிக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

டெஸ்லாவின் பங்குச்சரிவால் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு மிகப்பெரிய அளவில் சரிந்து உள்ளது என்றும் நேற்று டெஸ்லாவின் பங்கு மிக கடுமையாக சரிந்துள்ளதாகவும் தெரிகிறது. இருப்பினும் எலான் மஸ்கின் சொத்து மதிப்பு வலுவான நிலையில் தான் உள்ளது என்றும் அவர் இன்னும் உலகின் முன்னணி பணக்காரர்கள் பட்டியல் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார் சிப் ராக்கெட் வெடித்ததால் ஏற்பட்ட சரிவு இன்னும் ஒரு சில நாட்களில் மீண்டுவிடும் என்றும் அந்த நம்பிக்கை தங்களுக்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இது ஒரு தற்காலிக சரிவு தான் என்றும் விரைவில் அவருடைய டெஸ்லா மட்டுமின்றி அனைத்து நிறுவனங்களின் பங்குகளும் உயரும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.