Connect with us

பெரியார் சிலை குறித்து அவதூறு கருத்து-ஸ்டன்ட் மாஸ்டர் கனல் கண்ணன் ஜாமீன் மனு நிராகரிப்பு!!

kanal kannan

தமிழகம்

பெரியார் சிலை குறித்து அவதூறு கருத்து-ஸ்டன்ட் மாஸ்டர் கனல் கண்ணன் ஜாமீன் மனு நிராகரிப்பு!!

தமிழ் சினிமாவில் அதிகளவு ஸ்டன்ட் மாஸ்டர்கள் காணப்பட்டாலும் ஒரு சிலர் ஸ்டன்ட் மாஸ்டர்கள் சினிமாவிலும் ஒரு சில காட்சிகளில் வருவார்கள். அவர்களில் ஒருவர்தான் ஸ்டன்ட் மாஸ்டர் கனல் கண்ணன்.

இவர் சிவாஜி திரைப்படத்தில் வந்து ரசிகர்களை சம்பாதித்தார். மேலும் பல முன்னணி நட்சத்திரங்களுக்கு ஸ்டன்ட் மாஸ்டரகவும் பணியாற்றியிருந்தார், இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு இவர் பெரியார் சிலை பற்றி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனால் இவர் மீது வழக்கம் தொடுக்கப்பட்டது. மேலும் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் ஸ்டன்ட் மாஸ்டரும் இந்து முன்னணி நிர்வாகியுமான கனல் கண்ணனின் ஜாமின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

கனல் கண்ணனின் ஜாமீன் மனுவை நிராகரித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெரியார் சிலை குறித்து அவதூறு பேசியதால் ஸ்டன்ட் மாஸ்டர் கனல் கண்ணன் கைது செய்யப்பட்டார்.

சென்னை மதுரவாயலில் கடந்த ஒன்றாம் தேதி நடந்த கூட்டத்தில் பெரியார் சிலை குறித்து அவதூறு கருத்து தெரிவித்தார். தந்தை பெரியார் திராவிட கழக மாவட்ட செயலாளர் குமரன் புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top