‘ களத்தில் முதல்வர்’ திட்டத்தின் மூன்றாம் கட்டமாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி ஆகிய 5 மாவட்டங்களுக்குச் செல்ல உள்ளார். மார்ச் 5 மற்றும் 6 ம் தேதி என தகவல் தெரிவிக்கின்றனர்.
ஐந்து மாவட்டங்களில் நடைபெற்று வரும் திட்டப் பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்ய உள்ள ஸ்டாலின், மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள் மற்றும் விவசாயிகள் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, பிப்ரவரி 1ம் தேதி முதல் மாவட்டங்களில் அரசு செயல்படுத்தி வரும் வளர்ச்சி மற்றும் நலப்பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யும் திட்டத்தை ஜனவரி 1ம் தேதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
கிழக்கு ஈரோடு இடைத்தேர்தல்: குக்கர் விநியோகம் தொடர்பாக இரண்டு வழக்கு பதிவு!
அந்த வகையில், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களுக்குச் சென்ற அவர், இரண்டாம் கட்டமாக, தமிழகத்தின் சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டங்களுக்குச் சென்றார்.