Connect with us

திமுக ஆட்சியில்தான் தொழிலாளர்களுக்கு இவ்வளவு திட்டங்கள்; சுட்டிக்காட்டி வாழ்த்து தெரிவித்த ஸ்டாலின்…!!

ஸ்டாலின்

Tamil Nadu

திமுக ஆட்சியில்தான் தொழிலாளர்களுக்கு இவ்வளவு திட்டங்கள்; சுட்டிக்காட்டி வாழ்த்து தெரிவித்த ஸ்டாலின்…!!

நாளைய தினம் மே ஒன்றாம் தேதி பிறக்கிறது. மே ஒன்றாம் தேதி என்றாலே உழைப்பாளர் தினம் ஆகும். இதனால்  தமிழக மக்களுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இன்று காலை தமிழக ஆளுநர் ரவி அயராது உழைக்கும் தமிழக மக்களுக்கு மே தின வாழ்த்துக்கள் என்று தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தற்போது மே தின வாழ்த்து தெரிவித்துள்ளார். தொழிலாளர்களின் உற்ற தோழனாகவும், அவர்களது உரிமைகளை கேட்டு நிறைவேற்றும் அரசாகவும் திமுக அரசு விளங்குகிறது என்று கூறியுள்ளார்.

மேலும் தொழிலாளர்களின் எதிர்காலத்திற்காக, வாழ்வதற்கு தேவையான பல திட்டங்களை அரசு நிறைவேற்றுகிறது என்றும் கூறினார். திராவிட மாடல் ஆட்சியும் தொழிலாளர்களின் எண்ணங்களை அறிந்து அவர்களுக்கான திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டு வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

திமுக ஆட்சியில்தான் மே ஒன்றாம் தேதி ஊதியத்துடன் விடுமுறை என அறிவிக்கப் பட்டது என்பதனை முதலமைச்சர் ஸ்டாலின் சுட்டிக்காட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். தொழிலாளர்களுக்கு போனஸ், ஊக்கத் தொகை அளித்து நலவாரியம், அமைப்புசாரா வாரியம் ஏற்படுத்தியதே திராவிட முன்னேற்றக் கழக அரசுதான் என்றும் கூறினார்.

தொழிலாளர்களின் உயிர்காக்கும் மருத்துவ காப்பீட்டுத் திட்டங்களையும் வழங்கியது திமுக அரசுதான் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Nadu

To Top