ரூ.6230 கோடி நிவாரண நிதியை உடனே வழங்குக!: பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்;

அக்டோபர் மாத இறுதியில் இந்தியாவின் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கியது. இந்த வடகிழக்கு பருவ மழையின் காரணமாக தமிழகம் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டது. குறிப்பாக நவம்பர் மாதம் முழுவதும் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கன மழை கொட்டித் தீர்த்தது.

வடகிழக்கு பருவமழை

இதனால் மழைநீர், வீடுகள், சாலைகள், குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அங்குள்ள மக்களுக்கு பெரும் இன்னலைத் தந்தது. வெள்ள சீரமைப்புக்காக பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் 6,230 கோடி நிதி தேவை என்று கடிதம் எழுதியுள்ளார்.

ஸ்டாலின்

அதன்படி வெள்ள சீரமைப்புக்கு விரைவில் நிதி வழங்க கோரி பிரதமருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார் வெள்ள நிவாரணத்துக்கு ரூபாய் 6,230 கோடி நிதியை உடனே வழங்க முதலமைச்சர் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். ஏற்கனவே நவம்பர் 16, 25 மற்றும் டிசம்பர் 15ம் தேதிகளில் மழை வெள்ள சேத நிவாரணங்கள் உடன் கூடிய விரிவான அறிக்கை அனுப்பப்பட்டது என்றும் கூறினார்.

பெருந்தொற்று காரணமாக ஏற்கனவே மாநில அரசின் நிதி பாதிக்கப்பட்டுள்ளது என்றும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மழை வெள்ள பாதிப்பு, மாநில அரசின் நிதி நெருக்கடியை மேலும் கடுமையாக்கி உள்ளது என்றும் கூறினார்.

வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை சீர்செய்ய ரூபாய் 6230 கோடி நிதியை உடனே ஒதுக்கக் கோரி முதலமைச்சர் ஸ்டாலின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டில் பெரு மழையால் ஏற்பட்ட சேதங்களை ஒன்றிய அரசு குழுவினர் நவம்பர் 21ம் தேதியில் ஆய்வு செய்தனர் என்றும் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் வெள்ள பாதிப்பை சரி செய்யவும், புனரமைக்கவும் தேவையான நிதியை வழங்க முதலமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார். தமிழ்நாட்டில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் ஏராளமான குடியிருப்புகள் பல ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன என்றும் கூறினார்.

பெரு மழை வெள்ளத்தால் தமிழ் நாட்டின் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் சேதமடைந்தது என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். நிதியை உடனே வழங்குமாறு உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிடுமாறு பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதத்தில் வலியுறுத்தி குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment