Connect with us

9 மாநில முதல்வர்களுக்கு நம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கடிதம்!

News

9 மாநில முதல்வர்களுக்கு நம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கடிதம்!

b421492acfa132d737b6283f1ce9a674

தற்போது நம் தமிழகத்தின் திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சி நடைபெறுகிறது. அதன்படி தமிழகத்தின் முதல்வராக உள்ளார் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக உள்ள ஸ்டாலின். மேலும் அவர் தமிழகத்தில் முதல் முறையாக முதல்வராக பொறுப்பேற்று உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது .மேலும் அவர் மக்களுக்கு உதவி புரியும் வகையில் அவருடன் சேர்த்து 34 அமைச்சர்களை நியமித்துள்ளார். மேலும் இந்த அமைச்சர்கள் பலரும் அந்தத் துறைகளில் மிகவும் சிறந்தவர்களாகவும் காணப்படுகின்றனர் திமுக தலைவர் மு க ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியாக கூறிய அனைத்தையும் வரிசையாக நிறைவேற்றி வருகிறார்.6ae669c8e3f22a6133241b7d29462cd9

இதனால் மக்கள் மனதில் ஓரளவுக்கு இடத்தினை தக்க வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  தற்போது அவர் 9 மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அதில் ஒன்றிய அரசு கொண்டுவரும் துறைமுக மசோதாவை 9 கடலோர மாநிலங்களில் எதிர்க்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், கடலோர மாநிலங்களை சேர்ந்த ஒன்பது மாநில முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் கூறப்படுகிறது. இதில் கேரளா கர்நாடகா ஆந்திரா மேற்கு வங்கம் குஜராத் கோவா மகாராஷ்டிரா ஒடிசா புதுச்சேரி முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஒன்றிய அரசின் புதிய சட்டம் முன்முடிவு மாநில அரசின் அதிகாரத்தை பாதிக்கிறது என்றும் முதல்வர் முக ஸ்டாலின் கூறியுள்ளார்.

மேலும் மாநிலத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சிறு துறைமுகங்களை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவர இந்த மசோதா ஏற்றப்பட்ட தாகவும் அவர் கடிதத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் கூறியுள்ளார் .மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் ஜூலையில் நடக்கும் பட்சத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படும் என்றும் கூறினார். மரபு கருதி ஆளுநர் உரை யாற்றிய கூட்டத்தொடரில் தீர்மானங்கள் கொண்டு வரப்பட வில்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top