கடந்த பத்தாண்டுகளாக குட்டிச்சுவராகியுள்ளனர்! மழை வெள்ள பாதிப்பு ஆய்வில் ஸ்டாலின் பேட்டி;

நேற்றைய தினம் நம் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் எதிர்பாராவிதமாக அதிக மழை பெய்தது. இதன் விளைவாக சென்னையில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி இருந்தது. இன்று காலை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அதன்படி சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மழைநீர் தேங்கி உள்ள இடங்களில் நேரில் நடந்து சென்று ஆய்வு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் பேட்டியளித்துள்ளார்.

சென்னையில் மழை வெள்ள பாதிப்பு இன்றைக்குள் சீரமைக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் ஆய்விற்கு பிறகு முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி அளித்தார்.

கடந்த பத்தாண்டுகளாக மழைநீர் வடிகால் அமைப்புகளை குட்டிச்சுவராக்கி உள்ளனர் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். மழை முன்னறிவிப்பு தொடர்பான ஏற்பாடுகளை ஒன்றிய அரசு தான் செய்ய வேண்டும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். வானிலை முன்னறிவிப்பு தொடர்பாக ஒன்றிய அரசுக்கும் மீண்டும் கடிதம் எழுத உள்ளேன் என்று முதல் அமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment