ஃபிளாஷ்பேக் 2021: முதல் முறையாக தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றார்…..

இந்த ஆண்டில் தமிழக மக்களால் மறக்க முடியாத தினம் என்றால் அது மே 7 ஆம் தேதி தான். அன்று தான் தமிழக முதல்வராக கலைஞர் கருணாநிதியின் மகன் மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். தொண்டர்களின் கனவு மட்டுமல்ல ஸ்டாலினின் கனவும் நிறைவேறிய நாளும் அது தான்.

ஸ்டாலின்

50 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் ஐந்து முறை முதல்வராக பதவியேற்று தமிழகத்தை ஆட்சி செய்த மு.கருணாநிதியின் மகன் மு.க. ஸ்டாலின் தற்போது தமிழக முதல்வராக பதவி வகித்து வருகிறார். இதுவரை ஜெயலலிதா, கருணாநிதி என இரு பெரும் ஆளுமைகள் மட்டுமே இருந்த தமிழக அரசியல் சாம்ராஜ்யத்தில் முதல் முறையாக சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளராக களமிறங்கி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்து விட்டார் மு.க. ஸ்டாலின்.

 

stalin pti

தனது தந்தையின் நிழலில் பல ஆண்டுகளாக அரசியல் கற்று வந்த ஸ்டாலின் தற்போது முதல்வராகியுள்ள சமயத்தில் அவரின் தந்தை இல்லை. இருப்பினும் அவர் ஆசியில் ஸ்டாலின் நிச்சயம் தமிழகத்தை நல்வழியில் ஆட்சி புரிவார் என மக்கள் நம்பினார்கள். அனைவரின் கனவும் மெய்ப்பட தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் பதவி ஏற்றுக்கொண்டார்.

ஸ்டாலின்

தமிழக அரசியல் வரலாற்றிலேயே மறக்க முடியாத ஒரு சம்பவமாக இது பார்க்கப்பட்டது. ஏனென்றால் ஸ்டாலின் அவ்வளவு சாதாரணமாக இந்த இடத்தை அடைந்து விடவில்லை. தனது 14 வயது முதல் எத்தனை மேடைகள், எத்தனை பிரச்சாரங்கள், அரசியல் ஊர்வலங்களை பார்த்திருப்பார்.

மு க ஸ்டாலின்

தனது தந்தை தமிழக முதல்வர் அவர் ஒரு பெரிய கட்சியின் தலைவர் என்று ஒருபோதும் ஸ்டாலின் கருதியதில்லை. அவரும் காட்சியில் சாதாரண அடிமட்ட தொண்டனாக இருந்து படிப்படியாக அரசியல் கற்று கொண்டு வளர்ந்தவர் தான். அதன் பலனாகவே தற்போது தமிழக முதல்வராக பதவியேற்றுள்ளார். இந்த நாள் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு நாளாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment