Connect with us

திமுகவும் மதுரையும் ஒன்றுதான்! நலத்திட்டங்களை பட்டியலிட்டு ஸ்டாலின் பரப்புரை;

madurai

தமிழகம்

திமுகவும் மதுரையும் ஒன்றுதான்! நலத்திட்டங்களை பட்டியலிட்டு ஸ்டாலின் பரப்புரை;

திமுகவும் மதுரையும் ஒன்றுதான்! நலத்திட்டங்களை பட்டியலிட்டு ஸ்டாலின் பரப்புரை;

தற்போது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் இன்று அவர் மதுரை மாநகராட்சி சுற்றியுள்ள பகுதிகளுக்கு காணொலிக் காட்சி மூலமாக தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

மதுரை மாவட்டத்தில் போட்டியிடும் திமுக, கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பரப்புரை மேற்கொள்கிறார். திமுக வரலாற்றில் மதுரையும் மதுரை வரலாற்றில் திமுகவும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை என்று கூறினார்.

திமுக வரலாற்றில் எத்தனையோ தியாக மறவர்களை இந்த மதுரை மண் வழங்கியுள்ளது என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். மதுரை மாவட்டத்திலுள்ள வளர்ச்சித் திட்டங்களை பட்டியலிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் பரப்புரை மேற்கொள்கிறார்.

1971 ஆம் ஆண்டு நகராட்சியாக இருந்த மதுரையை மாநகராட்சியாக தரம் உயர்த்தியது கலைஞர் தான் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். மதுரையில் உயர்நீதிமன்ற கிளை மதுரையில் அமைய அடித்தளமிட்டது கலைஞர் தான் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

மதுரையின் வளர்ச்சி திட்டங்களுக்கு 14 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் ஸ்டாலின் கூறினார்.கூடல் நகரான மதுரையில் திமுக ஆட்சியில் பல்வேறு ஆக்கபூர்வமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.

புதிய வார்டுகளில் பாதாள சாக்கடை அமைக்க ரூபாய் 500 கோடி ஒதுக்கப்பட்டது என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறினார். மதுரை நகர பகுதியில் உள்ள மொத்த மார்க்கெட் ரூபாய் 50 கோடி செலவில் மாற்றப்பட உள்ளன என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.

மதுரை மாநகரில் உள்ள சிறைச்சாலைக்கு மாற்றப்படும் என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் பரப்புரை மேற்கொள்கிறார். மத்திய சிறை அமைந்துள்ள 40 ஏக்கர் பரப்பளவு மக்கள் பயன்படுத்தும் வகையில் பசுமை பகுதியாக மாற்றப்பட உள்ளது என்றும் அவர் கூறினார். திமுக ஆட்சியில் கட்டப்பட்ட பாலங்கள் பட்டியலிட்டு மு க ஸ்டாலின் மேற்கொள்கிறார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top