ஈபிஎஸ் விமர்சனம்; அதிகமாகவே உழைக்கிறார் ஸ்டாலின்! திமுகவிற்கு ஆதரவா? உயர்நீதிமன்றம் கருத்து;

தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ளது திராவிட முன்னேற்றக் கழகம். கடந்த பத்தாண்டுகளாக தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருந்த அதிமுக கட்சி கடந்த சட்டமன்ற தேர்தல் முடிவின் போது எதிர்க் கட்சியாக மாறியது.

அதிமுக

பொதுவாக எதிர்க்கட்சி என்றால் ஆளுங்கட்சி செய்யும் அனைத்து வேலைகளிலும் உன்னிப்பாக கவனிக்கும். அந்தப்படி நம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கருத்துக் கூறி வருவார்

இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஆளும் கட்சியினரின் மிரட்டலால் அதிகாரிகள் இடம் மாறுதல் செய்யப்படுகின்றனர் என்று விமர்சனம் வைத்திருந்தார். அதிகாரிகள் சுதந்திரமாக மக்கள் பணியாற்றும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.

ஆனால் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் திமுக ஆட்சியை குறித்து மக்கள் ஒரு முறை கூட சொல்லவில்லை என்று கூறியுள்ளார் .

இதன் மத்தியில் சென்னை உயர்நீதிமன்றமும் கருத்தினை பதிவு செய்துள்ளது. அதன்படி அதிகமாகவே உழைக்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின்; அவரை பாராட்டாவிட்டாலும் விமர்சனம் செய்வதை தவிர்க்கலாம் என்றும் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment