
Tamil Nadu
செந்தமிழ் தேன் மொழியாய் அன்னையர் தின வாழ்த்து தெரிவித்த ஸ்டாலின்!!
இன்றைய தினம் உலகமெங்கும் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் நடிகர் நடிகைகள் தங்களது அன்னையருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டு வருகின்றனர். அதோடு மட்டுமில்லாமல் ஒரு சில நடிகைகள் தங்களது குழந்தைகளுடன் சேர்த்து அன்னையர் தினத்தை கொண்டாடிக் கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.பொதுவாக நம் தமிழக முதலமைச்சர் கவிதை நயம் உடைய பண்பினை உடையவர். இதனால் அவர் வாழ்த்து தெரிவித்தாலே செந்தமிழ் தேன் ஒழுகும் போல் காணப்படும்.
அந்த வகையில் அவர், உயிரை துளைத்து அன்பு கடலை புகட்டி இயற்கை ஒவ்வொன்றுக்கும் அன்னை என்று குறிப்பிட்டுள்ளார். உயிராய் நம்மை சுமந்து காலமெல்லாம் நனைக்கும் அன்பு மழை அன்னை என முதலமைச்சர் ஸ்டாலின் அன்னையர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அன்பு, ஆறுதல், அரவணைப்பு, என மனிதன் எங்கும் உணர்வுகளுக்கு அகராதி சொல்லும் அன்னை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
