எனது நண்பர் சூப்பர் ஸ்டாருக்கு நன்றி! உங்கள் வாழ்த்து எனக்கு மிகுந்த ஊக்கத்தை அளிக்கிறது!!
கடந்த மாதம் இறுதியில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய சுயசரிதை நூலான உங்களில் ஒருவன் என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, கேரள மாநில முதல்வர் பினராய் விஜயன், நடிகர் சத்யராஜ், எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதில் ராகுல் காந்தி நூலினை வெளியிட்டார், அந்த புத்தகத்தினை தற்போது நடிகர் ரஜினிகாந்த் படித்துவிட்டு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதற்கு ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி உங்களில் ஒருவன் புத்தகத்தை படித்துவிட்டு தொலைபேசியில் பாராட்டிய நண்பர் நடிகர் ரஜினிகாந்திற்கு நன்றி என்று முதலமைச்சர் ஸ்டாலின் ட்விட் செய்துள்ளார். உங்களது வாழ்த்து மகிழ்ச்சி மட்டுமல்ல மக்களுக்காக உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஊக்கத்தை அளிக்கிறது என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இன்னும் இன்னும் இந்த நாட்டு மக்களுக்காக உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஊக்கத்தை அளிக்கிறது என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.
