திருச்சியில் ரூபாய் 1,085 கோடி மதிப்பில் திட்ட பணிகள்: தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின்;

நாள்தோறும் நம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட பணிகளை அறிவித்துக் கொண்டே வருகிறார். அவை மக்களுக்கு மிகவும் பிரயோஜனமாக அமைந்து கொண்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் ரூபாய் 1085 கோடியில் திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.

திருச்சி கேர் கல்லூரியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் ரூபாய் 1085 கோடி திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர். முடிவுற்ற 203 பணிகளை திறந்து வைத்தும், 532 பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்.

ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கவும், இதர உள்கட்டமைப்புக்காகவும் ரூபாய் 832 கோடியில் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூபாய் 28.24 கோடியில் சத்திரம் பேருந்து நிலையம் மேம்படுத்தப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தரைத்தளத்தில் 30 பேருந்துகள் நிறுத்தும் வசதியும் 11 கடைகளும் செயல்படும் வசதியும் உள்ளது. தாய்மார்கள் பாலூட்டும் அறை, பொருள்கள் பாதுகாப்பகம், ஓய்வு அறைகள் உள்ளன. முதல் தளத்தில் 17 கடைகள், 5 உணவகங்கள், காவல் உதவி மையங்கள் உள்ளன. முதல் தளத்தில்  350 சக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதியும் உள்ளன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment