இங்கிலாந்துக்கே ஸ்கெட்ச் போட்ட ஸ்டாலின்! அப்படி என்ன திட்டம் என்று தெரியுமா?

தற்போது நம் தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி நடைபெறுகிறது. இதில் முதன் முறையாக முதல்வராக பொறுப்பேற்றுள்ளார் மு.கஸ்டாலின். கடந்த 10 ஆண்டுக்கு பின்னர் தமிழகத்தில் மீண்டும் திராவிடர் முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் அடுத்தடுத்த அறிவிப்புகளை வரிசையாக முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றிக் கொண்டே வருகிறார்.

இந்த சூழ்நிலையில் தமிழ் நாட்டை தாண்டி இங்கிலாந்தில் சிலை நிறுவப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளது பெருமையான தகவலாக காணப்படுகிறது. அதன்படி தமிழ்நாடு அரசு சார்பில் இங்கிலாந்தில் பென்னிகுயிக் சிலை நிறுவப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். பென்னிகுயிக்  சொந்த ஊரான லண்டன் கேம்பர்லிக் நகர மைய பூங்காவில் சிலை நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பென்னிகுயிக் பிறந்தநாளை கொண்டாடும் நேரத்தில் அவருக்கு சிலை வைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். லண்டன் வாழ் தமிழர்களால் முயற்சி எடுக்கப்பட்டு சிலை நிறுவ சட்டப்படி உரிய ஒப்புதல் பெறப்பட்டுள்ளது என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

pennycuick

தென் தமிழகத்தின் உயிர் நாடியாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையை பல இடையூறுக்கு நடுவே கட்டியவர் பென்னிகுயிக் என்பதும் குறிப்பிடத்தக்கது. தன் சொத்துக்களை விற்ற பணத்தை கொண்டு மன உறுதி, தன்னம்பிக்கையுடன் முல்லைப் பெரியாறு அணையை கட்டினார் பென்னிகுவிக்.

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த தமிழ்நாடு அரசு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். முல்லைபெரியார் மீதான உரிமையை எப்போதும் விட்டுக்கொடுக்காமல் காக்க தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். முல்லைப் பெரியாறு அணையால் தேனி திண்டுக்கல் மதுரை சிவகங்கை இராமநாதபுரம் மக்களின் வாழ்வாதாரம் செழுமை அடைந்துள்ளது என்றும் ஸ்டாலின் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment