வ.உ.சி.யின் 85வது நினைவு நாள்: புத்தகங்களை வெளியிட்டார் ஸ்டாலின்!

அனைவருக்கும் 1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்தது மட்டுமே தெரியும். ஆனால் ஒவ்வொரு மாநிலத்திலும் பல பிரச்சனைகளை அந்தந்த மாநிலத்தில் விடுதலை போராட்ட வீரர்கள் எதிர்த்து குரல் கொடுத்துள்ளனர்.

வ.உ. சி

அவர்களில் நம் தமிழகத்தில் மிகவும் சிறப்பு பெற்ற விடுதலை போராட்ட வீரர் யார் என்றால் வ.உ. சிதம்பரனார். இவர் சுங்க வரியை எதிர்த்து ஆங்கிலேயருக்கு எதிராக  கப்பல் ஓட்டினார். இதனால் இவரை கப்பலோட்டிய தமிழன் என்றும் அழைக்கப்படுவர்.

இத்தகைய தமிழனுக்கு இன்றைய தினம்  நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள பல தலைவர்களும் இவரை நினைவு கூறும் வண்ணம் ஆக தனது கருத்துகளை கூறி வருகின்றனர்.

அவற்றில் மத்திய இணையமைச்சர் முருகன் பகுதியில் வ.உ. சி புரட்சிகரமான சிந்தனைகளை நினைவுகூர்ந்து போற்றுவோம் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். தென்னாட்டு தேசியத்துக்கு சுதந்திர கட்சியை வளர்த்த தன்மான வீரர் என்றும் மத்திய இணையமைச்சர் முருகன் ட்விட் செய்துள்ளார்.

இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வ.உ.சிதம்பரனார் பற்றிய புத்தகங்களை வெளியிட்டுள்ளார். அதன்படி 85வது நினைவு நாளை ஒட்டி வ.உ.சி நூல்களை முதலமைச்சர் வெளியிட்டுள்ளார்.

வ.உ. சி பன்னூல் திரட்டு மற்றும் வ.உ.சி.யின் திருக்குறள் உரை நூல்களை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார். தலைமைச் செயலாளர் இறையன்பு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பாடநூல் கழக தலைவர் ஐ.லியோனி போன்றோர் பங்கேற்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment