குன்னூர் விபத்தில் தப்பிய ஒரே ஒரு வீரரும் உயிரிழப்பு! ஸ்டாலின் இரங்கல்;

கடந்த வாரம் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. அந்த ராணுவ ஹெலிகாப்டர் ஒரு பெட்ரோல் விமானம் என்பதால் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு தீ பரவியது. அதில் பயணித்த 14 வீரர்களில் 13 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

முப்படை தலைமை தளபதி

குறிப்பாக முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உட்பட 13 பேர் அந்த விபத்தில் உயிரிழந்தனர். அதில் ஒரே ஒருவர் மட்டும் 80 சதவீத காயங்களோடு உயிர் தப்பினார். இந்த நிலையில் உயிர் தப்பிய வீரர் வரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அவருக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் காயமுற்ற உயிரிழந்தவரின் மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் கூறியுள்ளார்.

varun singh

விபத்தில் தப்பிய ஒரே ஒருவரான அவரின் மறைவு ஆழ் மனதை நெருடுகிறது என்று ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். வருண் சிங்கின் வீரமும், பங்கேற்புடன் கூடிய சேவையும் பிறருக்கு ஊக்கமாக அமையும் என்று ஸ்டாலின் கூறினார். குரூப் கேப்டன் வருண் சிங் மறைந்தாலும் நம் மனங்களில் இன்றும் வாழ்ந்து இருப்பார் என்று முதல் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment