Connect with us

வரிசைகட்டி தூத்துக்குடியில் கலக்கும் ஸ்டாலின்; ‘புதிய அறைகலன் பூங்கா’!

stall

Tamil Nadu

வரிசைகட்டி தூத்துக்குடியில் கலக்கும் ஸ்டாலின்; ‘புதிய அறைகலன் பூங்கா’!

வரிசைகட்டி தூத்துக்குடியில் கலக்கும் ஸ்டாலின்; ‘புதிய அறைகலன் பூங்கா’!

தற்போது முதல்வர் ஸ்டாலின் தூத்துக்குடி மாவட்டத்தில் நலத்திட்டங்களை அறிவித்து கொண்டு வருகிறார். அதன்படி நேற்றைய தினம் தூத்துக்குடி மாவட்டத்தில் மு.கருணாநிதியின் வெண்கல சிலையை திறந்து வைத்தார்.

இன்று காலை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்பிக் நகரில் 150 கோடி மதிப்பிலான மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையத்தை தொடங்கி வைத்தார். இவை இந்தியாவிலேயே முதல் மற்றும் மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அடுத்தபடியாக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாகவும் தகவல் கிடைத்துள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் சர்வதேச பூங்காவிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

ரூபாய் 1000 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ள பூங்காவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தற்போது அடிக்கல் நாட்டினார். இந்த பூங்கா சுமார் ஆயிரத்து 150 ஏக்கர் பரப்பளவில் அமையும் அறைகலன் பூங்கா என்பதும் குறிப்பிடத்தக்கது. சுமார் 4755 கோடி முதலீட்டில் 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஆல் சுமார் 17 ஆயிரத்து 476 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும், 33 புதிய திட்டங்களை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in Tamil Nadu

To Top