Connect with us

அதிரடி சஸ்பெண்ட்? ‘முதல்வன்’ பட ரேஞ்சுக்கு செய்த ‘முதல்வர் ஸ்டாலின்’!!

cm stalin

தமிழகம்

அதிரடி சஸ்பெண்ட்? ‘முதல்வன்’ பட ரேஞ்சுக்கு செய்த ‘முதல்வர் ஸ்டாலின்’!!

கடந்த இரண்டு நாட்களாக புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். அந்த படி இன்றைய தினம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார்.

அப்போது ஒரு சிறப்பான சம்பவம் ஒன்றை செய்துள்ளது அனைவரிடம் வரவேற்பு பெற்றதாக காணப்படுகிறது. முதலில் ராணிப்பேட்டையில் புதிதாக கட்டிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை ஸ்டாலின் திறந்து வைத்தார்.

ராணிப்பேட்டையில் ரூபாய் 118.40 கோடியில் பல வசதிகளுடன் கட்டப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார். திடீரென்று ராணிப்பேட்டையில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்தபோது பணியில் இல்லாத சமூகநலத்துறை அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

அதன்படி ராணிப்பேட்டை காரை கூட்ரோட்டில் அரசு குழந்தைகள் நல மையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது குழந்தைகள் நல மையத்தில் கண்காணிப்பாளர் பணியில் இல்லாததால் சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டார். முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் மையத்தின் கண்காணிப்பாளரை சஸ்பெண்ட் செய்தது சமூக நலத்துறை.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top