Connect with us

தேனியில் தெறிக்கவிடும் அறிவிப்புகளை வெளியிடும் ஸ்டாலின்..!! ஒவ்வொரு திட்டத்தையும் பார்த்து பார்த்து செய்யும் அரசு;

stalin new16

Tamil Nadu

தேனியில் தெறிக்கவிடும் அறிவிப்புகளை வெளியிடும் ஸ்டாலின்..!! ஒவ்வொரு திட்டத்தையும் பார்த்து பார்த்து செய்யும் அரசு;

வருகின்ற 7 ஆம் தேதியோடு தமிழகத்தில் முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற உள்ளது. இந்த ஓராண்டு கால கட்டத்தில் பல்வேறு விதமான நலத்திட்டங்களை ஸ்டாலின் செய்து மக்களிடையே நன்மதிப்பைப் பெற்று வருகிறார்.

இந்த நிலையில் அவர் இன்று தேனியில் பல்வேறு விதமான நலத்திட்டங்களை செயல்படுத்த சென்றுள்ளார்.

அவரைக் காண்பதற்காக ஏராளமான தொண்டர்கள் சூழ்ந்து உள்ளனர் . இதனால் தேனியில் திருவிழா போல கூட்டம் காணப்படுகிறது. அப்போது பேசிய அவர் ஒவ்வொரு திட்டத்தையும் பார்த்து பார்த்து அரசு செயல்படுத்தி வருகிறது என்று கூறினார்.

தேனியில் ரூபாய் 114.25 கோடியில் புதிய 40 திட்டப்பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ரூபாய் 300 கோடி மதிப்பிலான முடிவுற்ற மற்றும் புதிய திட்ட பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைத்தார் .இது மட்டுமின்றி மேலும் பல அறிவிப்புகளை ஸ்டாலின் வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் இன்றைய தினம் தேனி மாவட்டத்தில் பல்வேறு விதமான புதிய அறிவிப்புகள் வெளியிடப்படலாம் என்றும் இவை மக்களுக்கு மிகவும் அவசியமானதாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Nadu

To Top