இன்றைய தினம் தான் கடைசி நாளாக நம் தமிழகத்தில் சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் காணப்பட்டது. ஏப்ரல் 6-ஆம் தேதி தொடங்கி இன்றைய தினம் வரை கிட்டத்தட்ட 22 நாட்களாக சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதில் பல்வேறு விதமான துறைகளின் சார்பில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இந்த நிலையில் இறுதி நாளான இன்றைய தினத்தில் காவல்துறை மானிய கோரிக்கைகள் மீது சில அறிவிப்புகள் வெளியானது.
அதிலும் தமிழகம் ஸ்டாலின் 78 அறிவிப்புகளை வெளியிட்டார். சென்னை கொளத்தூர் உள்ளிட்ட 6 இடங்களில் புதிதாக தீயணைப்பு நிலையங்கள் ரூபாய் 11 கோடி செலவில் அமைக்கப்படும் என்று ஸ்டாலின் அறிவித்தார்.
ஒருங்கிணைந்த சுங்கச்சாவடி கண்காணிப்பு மையம் ரூபாய் 50 கோடி செலவில் அமைக்கப்படும் என்றும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார்.
மேலும் தமிழ்நாட்டில் விரைவில் 3000 காவலர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர் என்றும் ஸ்டாலின் கூறினார். இரவு காவல் பணியில் இருக்கும் அனைவருக்கும் சிறப்பு படியாக மாதம் 300 ரூபாய் வழங்கப்படும் என்றும், குட்கா போதைப் பொருட்களை தடுக்க முன்னுரிமை கொடுக்கப்படுகிறது என்றும், கூலி படையினரின் ஆதிக்கம் தடுக்கப்படும் எனவும் ஸ்டாலின் உறுதி அளித்தார்.