Connect with us

‘காமராஜருக்குள் ஸ்டாலின்’… இருவரையும் ஒரே ஓவியத்தில் வரைய ஓவிய ஆசிரியர் சொன்ன காரணம்!

WhatsApp Image 2022 09 17 at 1.16.37 PM

தமிழகம்

‘காமராஜருக்குள் ஸ்டாலின்’… இருவரையும் ஒரே ஓவியத்தில் வரைய ஓவிய ஆசிரியர் சொன்ன காரணம்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும் மணலூர்பேட்டை சேர்ந்த செல்வம் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை வரவேற்கும் விதமாகவும் தமிழக அரசுக்கு பாராட்டும் விதமாகவும் மதிய உணவுக்கு காமராஜர், காலை உணவுக்கு ஸ்டாலின் என்பதை குறிக்கும் வகையில்காமராஜ் படத்துக்குள்முதல்வர் ஸ்டாலின் ஓவியத்தை வரைந்துள்ளார்.

ஓவிய ஆசிரியர் செல்வம் கூறுகையில்:

அரசுப்பள்ளி மாணவருக்கான காலை உணவு திட்டத்தை முதல்வர் மு..ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார். நகரப் பகுதிகளிலும், கிராமப் பகுதிகளிலும், பள்ளிக்குச் செல்லக்கூடிய குழந்தைகள் காலைலேயே புறப்பட்டு விடுவார்கள் என்பதால் பெரும்பாலான குழந்தைகள் காலை உணவை சாப்பிடுவது இல்லை.

தற்போது இந்த காலை உணவுதிட்டத்தின் மூலம் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் காலை உணவை உட்கொள்வதோடு, நன்றாக படித்து வாழ்க்கை மேம்படுத்தி கொள்ள முடியும். முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மாணவர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம். தமிழ்நாடு அரசின்  காலை உணவுத் திட்டத்தைப் பார்க்கையில், மனதில்  ஏனோ ஒரு மகிழ்ச்சி வந்து நிறைகிறது.

காலை உணவு திட்டத்தை கொண்டுவந்த  தமிழக அரசுக்கும், முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கும் பாராட்டும் விதமாக மற்றும் என் கண்ணுக்கு தமிழக முதல்வர் மு..ஸ்டாலின் அவர்கள் காமராஜர் போன்றவர் என்று எண்ண தோன்றுகிறது. “காமராஜ் படத்துக்குள்இருந்து முதல்வர் ஸ்டாலின் ஓவியத்தை 15 நிமிடங்களில் வரைந்தார்,

 

WhatsApp Image 2022 09 17 at 1.16.37 PM 2

WhatsApp Image 2022 09 17 at 1.16.37 PM 1

பொதுமக்கள் ஓவியத்தை பார்த்து மதிய உணவுக்கு காமராஜர்காலை உணவுக்கு  தமிழக முதல்வர் ஸ்டாலின் என்று கூறி பகுதிநேர ஓவிய ஆசிரியர் செல்வம் அவர்களுக்கு பாராட்டுக்கள் தெரிவித்தார்கள்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top