Connect with us

மக்களை தேடி மருத்துவம்: 50 லட்சமாவது பயனாளியைத் தேடி மருந்து பெட்டகம் கொடுத்த ஸ்டாலின்!

makkalai

தமிழகம்

மக்களை தேடி மருத்துவம்: 50 லட்சமாவது பயனாளியைத் தேடி மருந்து பெட்டகம் கொடுத்த ஸ்டாலின்!

மக்களை தேடி மருத்துவம்: 50 லட்சமாவது பயனாளியைத் தேடி மருந்து பெட்டகம் கொடுத்த ஸ்டாலின்!

பத்தாம் ஆண்டிற்கு பிறகு தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டு வருகிறது. நேற்று நம் தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதிலும் 21 மாநகராட்சிகள் முழுவதுமாக திராவிட முன்னேற்றக் கழகம் வென்றதும் குறிப்பிடத்தக்கது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் கூறிய ஒவ்வொரு வாக்குறுதிகளையும் நிறைவேற்றிக் கொண்டு வருகிறார். அதிலும் குறிப்பாக கல்வி, மருத்துவம் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து கொண்டு வருகிறார்.

மாணவ மாணவிகளுக்கு இல்லம் தேடி கல்வி திட்டம் அமல்படுத்தப்பட்டு மாணவர்களின் படிப்பு பாதுகாக்கப்பட்டது. அதேபோல் வயதான முடியாதவர்களுக்கு மக்களை தேடி மருத்துவம் திட்டமும் அமல்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் 50 லட்சமாவது பயனாளிக்கு மருந்து பெட்டகம் வழங்கப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 50 லட்சமாவது பயனாளிக்கு மருந்து பெட்டகம் வழங்கினார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்.

செங்கல்பட்டு சித்தாலபாக்கத்தில் பயனாளிக்கு வீடு தேடி சென்று மருந்து பெட்டகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார் .அதில் நீரிழிவு, பிசியோதெரபி உள்பட 5 வகை நோய்க்கான மருந்துகளுடன் பயனாளிகளுக்கு பெட்டகத்தை வழங்கினார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top