நம் தமிழகத்தில் மாணவர்கள் போராட்டத்திற்கு இறங்குவது சகஜமாக மாறிவிட்டது. இதற்கு முன்பு ஆன்லைன் தேர்வுகள் தான் நடத்த வேண்டும் என்று மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். இந்த சூழலில் ஒரு தனியார் கல்லூரியை அரசு கல்லூரியாக மாற்ற வேண்டும் என்று மாணவர்கள் பல வருடங்களாக கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.
மாணவர்களின் கோரிக்கையை ஏற்று அந்த கல்லூரியை அரசுக் கல்லூரியாக மாற்றப்பட்டுள்ளது. இது ஈரோடு மாவட்டத்திலுள்ள சிக்கய்ய நாயக்கர் கல்லூரி ஆகும். அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள சிக்கய்ய நாயக்கர் கல்லூரியை அரசுக் கல்லூரியாக மாற்றப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சுமார் 1400 க்கு மேற்பட்ட மாணவர்கள் சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் பயின்று வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் சிக்கய்ய நாயக்கர் கல்லூரியை அரசுக் கல்லூரியாக மாற்ற கடந்த 20 ஆண்டுகளாக மாணவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர் என்பது ஆச்சரியப்படத்தக்க உண்மையாக காணப்படுகிறது.
20 ஆண்டுகள் கோரிக்கையை தமிழக அரசு ஏற்று சிக்கய்ய நாயக்கர் கல்லூரியை அரசுக் கல்லூரியாக மாற்றப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனால் மாணவர்கள் மத்தியில் மிகுந்த சந்தோஷம் உண்டாகி உள்ளது.