சொன்ன வாக்கை நிறைவேற்றிய ஸ்டாலின்:கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி!

நகைக்கடன்

தற்போது நகை கடன் தள்ளுபடி குறித்து முதல்வர் மு க ஸ்டாலின் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி ரூபாய் 6 கோடி வரையிலான நகை கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் ஐந்து சவரன் நகை கடன் தள்ளுபடி காண அரசாணை வெளியாக உள்ளது.ஸ்டாலின்

2021 ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி ஐந்து சவரன் நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. மார்ச் 31ஆம் தேதி வரை கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன்க்குட்பட்ட நகை கடன் 17114 கோடி நிலுவையில் இருந்தது என்றும் அரசாணையில் தகவல் வெளியாகி உள்ளது.

ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை கடனை திருப்பி செலுத்தியவர்கள், தகுதி பெறாத தேர்வுகளை நீக்கியபின் கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தல் பரப்புரையின் அறிவித்திருந்தார்.

தேர்தலின் போது மு கஸ்டாலின் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நகை கடன் தள்ளுபடி வழங்குவதன் மூலம் தமிழ்நாட்டில் நகை அடகு வைத்து கடன் பெற்று இருந்த 16 லட்சம் பேர் பயன் பெறுவர் என்றும் கூறப்படுகிறது.

நகைக்கடன்அப்பட்டமாக நகை கடன் மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.நகை கடன் தள்ளுபடி நகையை அடமானம் வைத்து கடன் பெற்ற 16 லட்சம் பேர் பயன் பெறுவார்கள்.

ஒரு குடும்பத்தில் ஐந்து சவரன் உட்பட்ட பொது நகை கடன் பெற்றவர்களுக்கு இந்தக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறப்படுகிறது. தள்ளுபடி செய்யப்படும் அசல் மற்றும் வட்டி தொகையை கூட்டுறவு சங்கங்களுக்கு அரசு வழங்கி விடும் என்றும் கூறப்படுகிறது.

ஒரு குடும்பத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தனித்தனியாக பெற்ற கடன் மொத்தமாக 5 சவரனுக்கு கீழ் இருந்தால்,தகுதி பெற்ற நபர்கள் கடன் தொகையில் பாதி அளவில் செலுத்தி இருந்தாலும் எஞ்சிய தொகை தள்ளுபடி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட குடும்ப அட்டை, ஆதார் விவரங்களை சரியாக அளிப்பவர்களுக்கு மட்டுமே கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

மறுவாழ்வு முகாம்களில் வாழும் இலங்கை தமிழர்கள் பெற்ற ஐந்து சவரன் நகை கடன்களும் நிபந்தனைக்கு உட்பட்டு தள்ளுபடி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. தமிழ்நாடு அரசின் குடும்ப ஓய்வூதியர்களுக்கு கடன் பெற்று இருந்தாலும் தள்ளுபடி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print