Connect with us

‘அடுக்குமாடி குடியிருப்பு’, ‘ரோந்து வாகனம்’-தொடங்கி வைத்தார் ஸ்டாலின்..!!

Stalin opening Rs 20 crore SECVPF

செய்திகள்

‘அடுக்குமாடி குடியிருப்பு’, ‘ரோந்து வாகனம்’-தொடங்கி வைத்தார் ஸ்டாலின்..!!

அடுத்தடுத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறுவிதமான திட்டங்களை தொடங்கி வைத்துக் கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்றைய தினம் புதிய குடியிருப்புகளை திறந்துவைத்தார்.

அதன்படி ரூபாய் 270 கோடியில் கட்டப்பட்ட புதிய குடியிருப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தலைமைச் செயலகத்திலிருந்து காணொளியில் திறந்துவைத்து 4880 பயனாளிகளுக்கு குடியிருப்புக்கான ஒதுக்கீட்டு ஆணையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இதனால் பயனடைவர் என்று தெரிகிறது.

இந்த நிலையில் இன்றைய தினம் மேலும் சென்னையில் கண்காணிப்பை தீவிரப்படுத்த புதிதாக வாங்கப்பட்ட ரோந்து வாகனங்களையும் முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில் புதிய ரோந்து வாகனங்களை முதலமைச்சர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். காவல் பயன்பாட்டுக்காக ரூபாய் 14.71 கோடியில் 93 போக்குவரத்து காவல் ரோந்து வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top