கத்திக்குத்து வாங்கிய பெண் போலீசுக்கு தொடர்பு கொண்டு நலம் விசாரித்த ஸ்டாலின்;
இன்று காலை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பெண் போலீசுக்கு ஐந்து லட்சம் ரூபாய் நிதி உதவியினை அறிவித்தார். ஏனென்றால் அவரை மறுபடி ஒருவர் கத்தியால் குத்தியதாக தெரிகிறது. அதன்படி திருநெல்வேலி மாவட்டம் பழவூர் அருகே கோவில் திருவிழா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார் பெண் உதவி ஆய்வாளர் மார்க்ரெட் தெரசா.
அப்போது பணியில் இருந்த போது சுத்தமல்லி காவல் நிலைய உதவி ஆய்வாளர் மார்க்ரெட் தெரசாவை மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்தினார். முன்விரோதம் காரணமாக பெண் ஆய்வாளரை பழிவாங்க கத்தியால் குத்தியதாக கைதான ஆறுமுகம் என்பவர் வாக்குமூலம் அளித்தார்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண் காவல் உதவியாளர் மார்க்ரெட் தெரசாவுக்கு ரூபாய் 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். திருநெல்வேலி சுத்தமல்லி காவல் நிலைய பெண் காவல் உதவி ஆய்வாளர் மார்க்ரெட் தெரசாவுக்கு உயர் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டு இருந்தார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மார்க்ரெட் தெரசாவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார் ஸ்டாலின். காவல் உதவி ஆய்வாளர் தாக்கிய ஆறுமுகம் என்ற நபர் கைது செய்யப்பட்டு அவரிடம் தற்போது வரை விசாரணை நடைபெற்றுக் கொண்டு வருகிறது.
