இன்றைய தினம் டெல்லியில் 67வது திரைப்பட விருது விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் தமிழகத்தில் உள்ள பல முன்னணி நட்சத்திரங்கள் விருதுகள் கிடைத்துள்ளது. சிறந்த நடிகருக்கான விருதினை அசுரன் நாயகன் தனுஷ் பெற்றுவிட்டார்.
துணை நடிகருக்கான விருதினை விஜய் சேதுபதி பெற்றுள்ளார். இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தாதாசாகேப் பால்கே விருது கிடைத்துள்ளது. இதனால் சூப்பர் ஸ்டார் குடும்பத்தில் நடிகர் தனுஷ் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவரும் விருது பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதன்படி திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது பெறும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திரை வானில் சூரியன் நடிகர் ரஜினிகாந்த் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். தமிழ் திரையுலகை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்று உலகளவில் பல விருதுகளை பெற வேண்டும் என்றும் கூறியுள்ளார் முதலமைச்சர் மு க ஸ்டாலின்.