Connect with us

69-வது பிறந்தநாள் கொண்டாடும் ஸ்டாலின்; 69-ல் இவ்வளவு தனித்தன்மை இருக்கிறதா?

stall

Tamil Nadu

69-வது பிறந்தநாள் கொண்டாடும் ஸ்டாலின்; 69-ல் இவ்வளவு தனித்தன்மை இருக்கிறதா?

69-வது பிறந்தநாள் கொண்டாடும் ஸ்டாலின்; 69-ல் இவ்வளவு தனித்தன்மை இருக்கிறதா?

தமிழகத்தில் முதல் முறையாக ஆட்சிக்கு வந்ததும் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறார் தமிழக முதலமைச்சர். இந்த நிலையில் அவருக்கு இன்று பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இவரின் பிறந்தநாளையோட்டி நேற்றையதினம் ‘உங்களில் ஒருவன்’ என்ற சுயசரிதை நூலின் முதலாம் பாகம் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் தமிழக முதலமைச்சர் தனது பிறந்தநாளுக்கு பெரியார் நினைவிடத்தில் சென்று மரியாதை செலுத்தி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி சென்னையில் பெரியார் நினைவிடத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

ஸ்டாலினின் 69வது பிறந்த நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஸ்டாலினுக்கு பலரும் வாழ்த்துக் கொண்டு வருகின்றனர். அந்த வகையில் முதலமைச்சருக்கு கி.வீரமணி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் சமூகநீதிக்கான சரித்திர நாயகனான நமது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று கூறினார்.

அறுபத்தி ஒன்பது என்பது தனித்தன்மையானது. இந்தியாவிலேயே வேறு எங்கும் இல்லாத சமூக நீதி என்னும் இட ஒதுக்கீடு 69 விழுக்காடு என்றும் அவர் கூறினார். 69% இட ஒதுக்கீடு ஒடுக்கப்பட்டோருக்கு எப்படி தனி சிறப்போ அதுபோலவே 69 வயதில் அடியெடுத்து வைக்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின். அறுபத்தி ஒன்பது வயதில் அடியெடுத்து வைக்கும் முதலமைச்சர் சமூகநீதி மாநில உரிமையை முன்னிறுத்தி நல்லாட்சி நடத்திக் கொண்டு வருகிறார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Nadu

To Top